அன்பே சிவம் திரைப்படத்தில் ஏஜென்ட் டினா இணையத்தில் வைரலான புகைப்படம்

Kanimoli
4 years ago
அன்பே சிவம் திரைப்படத்தில் ஏஜென்ட் டினா இணையத்தில் வைரலான புகைப்படம்

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வரும் திரைப்படம் விக்ரம்.

நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகமாகி கொண்டே இருக்கும் நிலையில் தற்போது வரை அப்படம் உலகளவில் ரூ. 320 கோடிக்கும் வசூலை வாரி குவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் மட்டும் ரூ.130 கோடிக்கும் வசூலை குவித்துள்ள விக்ரம் இனி வரும் நாட்களில் பாகுபலி படத்தை முந்தி தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் கமல் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் அன்பே சிவம். அப்படத்தை இன்று புகழ்ந்து பேசுபவர்கள் அதிகம் அந்தளவிற்கு அப்படம் அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே விக்ரம் திரைப்படத்தின் முலம் பிரபலமாகியுள்ள ஏஜென்ட் டினா கமல் அன்பே சிவம் படத்திலும் நடித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்.

ஆம், அப்படத்தில் ஏஜென்ட் டினா என்னும் வசந்தி கமலின் குழுவில் ஒருவராக இருப்பார். இதோ அந்த வைரல் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4