தனுஷ் பட அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

Prabha Praneetha
4 years ago
தனுஷ் பட அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில் 'வாத்தி' படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படம் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

 'வாத்தி' படத்தின் பாடல் ஒன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து அவர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லுரியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

மேலும், இந்த பாடலை தனுஷ் பாடி இருக்கலாம் என்றும் இந்த பாடல் ரெளடிபேபி பாடல் போன்று இருக்கலாம் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4