மீண்டும் நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா?

Nila
4 years ago
மீண்டும் நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா?

தென்இந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நாக சைதன்யாவும் சமந்தாவும் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். 

விவாகரத்திற்கு யார் காரணம் என பல வதந்திகள் பரவி வந்தன. இதையடுத்து இருவரும் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகை சமந்தாவை பிரிந்து ஒரு வருடம் கழித்து தற்போது நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. நாக சைதன்யா - சோபிதா துலிபாலான் நாக சைதன்யா கடந்த சில வாரங்களாக நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. 
இவர்கள் இருவரும் அண்மையில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாக சைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்படட்டதாகவும் அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் 'மேஜர்' படப்பிடிப்பின் போது இருவரும் ஓட்டலில் பலமுறை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெலுங்கு வட்டாரத்தில் மிகவும் சென்சேஷனலாக பேசப்படும் நிலையில் இந்த செய்திகளை இருவரும் இதுவரை மறுக்கவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4