அரசாங்க நிறுவன பரல்களில் பெற்றோல் அடித்ததால் குழப்பம்! எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் கேள்வி
Mayoorikka
2 years ago

முல்லைத்தீவு - மல்லாவி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க பாரவூர்தி ஒன்றில் கொண்டு வரப்பட்ட பரல்களில் பெற்றோல் அடித்த போது அங்கு மக்கள் சூழ்ந்து பாரவூர்தியை முற்றுகையிட்ட நிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பரல்களில் பெற்றோல் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு கூட எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த பெற்றோல் எங்கிருந்து வந்தது என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



