எரிவாயு பிரச்சினையை தீர்க்க பிரதமர் ரணில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை!

Nila
2 years ago
எரிவாயு பிரச்சினையை  தீர்க்க பிரதமர் ரணில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை!

நாட்டுக்கு 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்ய உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசாங்கத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

இதனூடாக எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை,  இடைக்கால பாதீட்டில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!