ஊழியர்கள் போராட்டம்- இங்கிலாந்தில் ரயில் சேவை பாதிப்பு

#UnitedKingdom #Railway #Protest
Prasu
4 years ago
ஊழியர்கள் போராட்டம்- இங்கிலாந்தில் ரயில் சேவை பாதிப்பு

இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 

நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் 11 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். 

50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை முடங்கி போய் இருக்கிறது. 

ரெயில்கள் இயக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோர் பஸ்கள், கார்களில் அலுவலகங்கள், மற்ற இடங்களுக்கு செல்கிறார்கள். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. 

மேலும் வாடகைகார்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பஸ் நிறுத்தங்களில் ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே போராட்டத்தை கைவிட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அவர் கூறும்போது, இங்கிலாந்து மக்கள் மற்றும் ரெயில் பணியாளர்களின் நலனுக்காக ஒரு விவேகமான சமரசத்துக்கு வர வேண்டிய நேரம் இது என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4