விக்கி-நயன் போட்டுள்ள அடுத்த பிளான்!
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
ஏழு வருடங்களாக காதலர்களாக இருந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ப்ரைவேட் ரெசார்ட் ஒன்றில் மிகப்பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு திருப்பதி கோயிலுக்கு சென்ற புதுமணத் தம்பதியர்கள், அதன்பிறகு நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவில் குடும்பத்தினரின் தடபுடல் விருந்தில் கலந்துகொண்டனர்.
பிறகு ஹனிமூனுக்கு, இங்க தான் செல்கிறோம் என யாரிடமும் சொல்லாமல் சைலண்ட்டாக கிளம்பி தாய்லாந்து சென்றனர். அங்கு விக்கி-நயன் இருவரும் எடுத்துக்கொள்ள ரொமான்டிக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இவர்களது அடுத்த போட்டோ எப்போது வரும் என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்த இந்த நிலையில், விக்கி-நயன் தங்களது ஹனிமூன் ட்ரிப்பை முடித்து விட்டனர்.
தாய்லாந்தில் இருந்து தாயகம் கிளம்பும் நயன்-விக்கியின் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனம் பெறுகிறது.
இதில் இவர்கள் இருவரும் தாய்லாந்தில் இருந்து கிளம்பும்போது அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் ஊழியர் ஒருவர் வாசல் வரைக்கும் வந்து டாட்டா காண்பித்து வழியனுப்பும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
ஹனிமூனை முடித்த பிறகு நயன்தாரா, விக்னேஷ் சிவன் அடுத்து என்ன பிளான் வைத்திருக்கின்றனர் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஹனிமூனை முடித்துவிட்டு சென்னை திரும்பும் நயன்தாரா, அட்லி இயக்கிக்கொண்டிருக்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு கதாநாயகியாக நடிக்க கிளம்ப உள்ளார்.
இந்த படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போன்று இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கவிருக்கும் தல அஜித்தின் 62-வது படமான AK 62 படத்திற்கான வேலையை துவங்க போகிறார்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாரா இல்லையா என்பது இனிதான் தெரிய வரும்.
திருமணத்திற்கு பிறகு நயன்தாரா என்னென்ன படங்களில் கமிட்டாகியிருக்கிறார் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளதால் அவர் நடிக்கும் படங்களில் விக்னேஷ் சிவனின் தலையீடு இருக்கும் என்பது தெரிகிறது.



