இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீனிய வாலிபர் உயிரிழப்பு

#Israel #Attack #Death
Prasu
4 years ago
இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில்  பாலஸ்தீனிய வாலிபர் உயிரிழப்பு

இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில்  பாலஸ்தீனிய வாலிபர் உயிரிழந்துள்ளார்.

பாலஸ்தீன நாட்டில் ரமல்லா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின்   கிழக்கே சில்வாத் என்ற கிராமத்திற்குள் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கடந்த வெள்ளி கிழமை அன்று  புகுந்துள்ளனர். 

இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கும், 20க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய வாலிபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இந்த மோதலில் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் முகமது ஹமீது என்ற வாலிபர் பலத்த காயமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை வீரர்கள் கைது செய்துள்ளனர். அதன்பின்னர் ஹமீது, இஸ்ரேலிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

எனினும், அவர் சிகிச்சை  பலனின்றி  உயிரிழந்துள்ளார். மேலும் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாலஸ்தீனிய அதிபர் முகமது அப்பாஸ் தலைமையிலான கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அதன்படி பாலஸ்தீனத்தில் இன்று பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளன. 

இருப்பினும் இஸ்ரேலிய வீரர்கள் தரப்பில், ரமல்லா நகர் அருகே சாலையில் பொதுமக்கள் மீது சில பாலஸ்தீனியர்கள் பெரிய கற்களை வீசியுள்ளனர். இந்த கலவரத்தை நிறுத்தும்படி அறிவுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால், சந்தேகத்திற்குரிய நபர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4