சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல பாப் பாடகருக்கு 30 வருடங்கள் சிறை தண்டனை

#Sexual Abuse #Arrest
Prasu
4 years ago
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல பாப் பாடகருக்கு 30 வருடங்கள் சிறை தண்டனை

அமெரிக்காவில் பிரபல பாப் பாடகரான ஆர். கெல்லிக்கு, சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 30 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆர்.கெல்லி, பிரபல பாப் பாடகர் ஆவார். இவர் மீது அதிகமான பெண்கள் பாலியல் புகார்கள் கொடுத்திருக்கிறார்கள். சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், கெல்லி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து வருகிறார்.

எனினும், காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கெல்லி, தன் நண்பர்களோடு சேர்ந்து சிறுமிகளை பணிக்கு வைத்து, அவர்களை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆபாச வீடியோக்கள் எடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது மட்டுமல்லாமல் இந்த வழக்குகளில் தொடர்புடைய சாட்சிகளை அவர் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தற்போது, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, நீதிமன்றம் அவருக்கு முப்பது வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4