பணவீக்கம் சாதனை படைக்கிறது

#SriLanka
பணவீக்கம் சாதனை படைக்கிறது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஜூன் மாதத்தில் பணவீக்கம் 54.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் மாதாந்திர பணவீக்கம் ஜூன் மாதத்தில் பணவீக்கத்தை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு மே மாதத்தில் 14.2 சதவீதமாக இருந்த ஆண்டு சராசரி பணவீக்கம் ஜூன் இறுதியில் 18.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இந்த மாதத்தில் உணவுப் பொருட்களின் விலைகளும் 80% அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உணவு அல்லாத பொருட்களின் விலைகள் 42.4% அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரிசி, மிளகாய், தானியங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களின் விலையேற்றம் போன்றே, தற்போதைய எரிபொருள் நெருக்கடியை அடுத்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!