விக்ரம் படத்தின் சாதனையால் கமலுக்கு கிடைத்த அங்கீகாரம்

Prabha Praneetha
2 years ago
 விக்ரம் படத்தின் சாதனையால்  கமலுக்கு கிடைத்த அங்கீகாரம்

இத்தனை வருடங்கள் கமலஹாசன் திரைப்படங்களில் நடித்ததற்கு, தற்போது தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தில் கமலஹாசனுக்கு தயாரிப்பாளராகவும், நடிகராகாவும் அவரது மார்க்கெட் மேலும் உயர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து, அடுத்தடுத்த திரைப்படங்களான இந்தியன் 2,தேவர் மகன் 2, உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீர நாடான துபாய்க்கு செல்ல கமலஹாசனக்கு சிறப்பு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் முதல் முறையாக நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விசாவை பெற்றிருந்தார். இவரை தொடர்ந்து நடிகைகள் அமலாபால், காஜல் அகர்வால், நடிகர்கள் பார்த்திபன், நாசர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே 60 ஆண்டுக்கும் மேலாக சினிமாவில் கொடிக்கட்டி பறந்த உலகநாயகன் கமல்ஹாசனுக்கு, தற்போது கோல்டன் விசாவினை வழங்கி துபாய் அரசு கௌரவித்துள்ளது.

இந்த கோல்டன் விசாவின் பலன்களின் மூலமாக அடுத்த 10 வருடங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் துபாய்க்கு செல்லலாம், அதேபோல அங்கு எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம்.

ஏற்கனவே விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக, துபாயில் அமைந்துள்ள மிகப்பெரிய கட்டிடமான பூர்ஜ் கலிஃபாவின் வெளிப்புறத்தில் விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!