20 ஆண்டுகளுக்கு பின் மாதவனுடன் சிம்ரன்

Nila
3 years ago
20 ஆண்டுகளுக்கு பின் மாதவனுடன் சிம்ரன்

20 ஆண்டுகளுக்கு பிறகு மாதவனுடன் இணைந்து நடித்திருப்பது குறித்து சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் என்ற பெயரில் நடிகர் மாதவன் திரைப்படம் ஒன்றை நடித்து இயக்கியுள்ளார்.

இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில், பார்த்தாலே பரவசம் படத்தில் சிமி மற்றும் மாதவன், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் திரு மற்றும் இந்திரா ஆகிய கதாப்பாத்திரங்களை செய்தது முதல், ராக்கெட்ரி படத்தில் திரு மற்றும் திருமதி நம்பி நாராயணனாக நடித்தது வரை எதுவும் மாறவில்லை.

மேடி, 20 ஆண்டுகளுக்கு பிறகு உன் இயக்கத்தில் உன்னுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீ சிறப்பானவன் என்று குறப்பிட்டு, மாதவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4