ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிட வேண்டாம்-தலீபான் அமைப்பு எச்சரிக்கை

#Afghanistan #Taliban #Warning
Prasu
4 years ago
ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிட வேண்டாம்-தலீபான் அமைப்பு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலீபான் பயங்கரவாத ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். அப்போது ஆப்கானிஸ்தான் மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற சில பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்கள். இதனை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தான்  விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலீபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தலைநகர் காவலில் நடைபெற்ற இஸ்லாமிய மதகுருக்ககளின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆப்கானிஸ்தான் மூத்த மத தலைவர் மவுலாவி ஹெபதுலா அகுந்த்ஸாதா, சுதந்திரமாக இல்லாமல் வளர்ச்சி அடைய முடியாது. கடவுளுக்கு நன்றி நாங்கள் தற்போது ஒரு சுதந்திர நாடாக உள்ளோம். எங்களுக்கு அவர்களின் உத்தரவுகளை வழங்க கூடாது. இது எங்கள் அமைப்பு எங்களுக்கு எங்க சொந்த முடிவுகள் இருக்கிறது. பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளை அதிலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளை ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகத்தை அங்கீகரிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேலும் எங்கள் மீதான அனைத்து தடைகளையும் விடுவிக்கவும் நிதியை விடுவிக்கவும் மற்றும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் கேட்டுக் கொள்கின்றோம்.

அண்டை நாடுகளுடன் நாங்கள் தலையிட மாட்டோம். அவர்கள் ஆப்கானிஸ்தானில் தலையிடக்கூடாது எனவும் நாட்டில் நடந்த பல தாக்குதல்களுக்கு பின்னணியில் இருப்பதாக கூறிய இஸ்லாமிய அரசு தீவிரவாத குழு சட்டம் விரோதமானது என தெரிவித்துள்ளார்.

கலிபான் துணைத்தலைவரும் உள்துறை அமைச்சருமான சிராஜுதீன் ஹக்கானி பேசும்போது உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் அனைத்து பிரச்சினைகளையும் உள்ளடக்கி ஒரு அரசாங்கத்தையும் பெண்களுக்கு  கல்வி வழங்கவும் கோரிக்கைகளை வைத்துள்ளன. இதற்கு உடனடியாக தீர்வு கிடைக்காது இருந்த போதிலும் சில காலம் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4