காளிதேவி கையில் சிகரெட் வலுக்கும் எதிர்ப்புகள் தொடர்பில் பெண் இயக்குனரின் பதில் என்ன தெரியுமா?
பெண் இயக்குனர் ஒருவர் இயக்கிய படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த சர்ச்சைக்கு இயக்குநர் என்ன பதில் அளித்துள்ளார் என்பதை பார்ப்போம்.
கனடாவைச் சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை சமீபத்தில் தான் இயக்கிய ’காளி’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ’காளி’ வேடத்தில் அணிந்த பெண் ஒருவர் புகை பிடிப்பது போன்று உள்ளது.
இதனால் இந்து அமைப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து டெல்லியை சேர்ந்த ஒருவர் லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வழக்கு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்து அமைப்புகள் லீனா மணிமேகலைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன் மீதான தாக்குதலுக்கு பதிலளித்த லீனா மணிமேகலை, ‘எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை ,அதனால் இருக்கும் வரை எதையும் அஞ்சாமல் இருந்துவிடப் போகிறதுல் அதற்கு என் உயிரே விலை என்றாலும் தரலாம் என்பதுதான் எனது கருத்து என்று பதிந்துள்ளார்.
கனடா தலைநகர் டொரண்டோவில் உள்ள அருங்காட்சியகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இந்த திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக லீலா மணிமேகலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை இந்த போஸ்டரை பார்த்த பலருக்கு என் மீது வெறுப்பு இருந்தாலும், படத்தை பார்த்தால் என்னிடம் ’லவ் யூ’ என்று சொல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.