விஜய்காந்தின் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள வீட்டிற்கு முன்பு குவிந்த ரசிகர்களும், ஆதரவாளர்களும்

Prabha Praneetha
3 years ago
விஜய்காந்தின் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள  வீட்டிற்கு முன்பு குவிந்த  ரசிகர்களும், ஆதரவாளர்களும்

தேமுதிக தலைவர் விஜய்காந்தின் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள அவரின் வீட்டிற்கு முன்பு ரசிகர்களும், ஆதரவாளர்களும் குவிந்து வருகிறார்கள்.

நீரிழிவு பிரச்சனையால் அவருக்கு காலில் மூன்று விரல்கள் அண்மையில் அகற்றப்பட்டன. அது குறித்து அறிந்த சினிமா ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் வேதனை அடைந்தார்கள்.

எப்படி இருந்த கேப்டன் இப்படி ஆகிவிட்டாரே என்று வேதனைப்படுகிறார்கள். விரல்கள் அகற்றிய பிறகு வீடு திரும்பிய விஜயகாந்துக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜயகாந்தின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று அவரின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதை கேட்டு ரசிகர்கள் மேலும் வேதனை அடைந்துள்ளனர். கேப்டனுக்கு ஒன்றும் ஆகாது.

அவர் செய்த தான தர்மம் அவரை காக்கும். தைரியமாக இருங்க கேப்டன் என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் விஜய்காந்தின் உடல்நலம் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் அவரின் வீட்டிற்கு முன்பு ஆதரவாளர்கள் தினமும் கூடுகிறார்கள். ஆனால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. அதனால் வீட்டு வாசலோடு அனைவரும் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

விஜயகாந்தை பார்க்க முடியாவிட்டாலும், அவர் வீட்டு வாசல் வரை வந்த திருப்தியில் பலரும் திரும்பிச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4