இசையமைப்பாளர் இளையராஜா எம்பியாக நியமனம்
Kanimoli
2 years ago

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில் அறிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா, ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.



