ரஞ்சிதாவிற்கு போட்டியாக நித்யானந்தாவை திருமணம் செய்ய விரும்பும் ப்ரியா ஆனந்த்

Nila
3 years ago
ரஞ்சிதாவிற்கு போட்டியாக நித்யானந்தாவை திருமணம் செய்ய விரும்பும் ப்ரியா ஆனந்த்

நித்தியானந்தாவை திருமணம் செய்ய விரும்புவதாகவும் அவரை திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய பெயரை கூட மாற்ற தேவை இல்லை என்றும் தமிழ் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலக நடிகைகளில் ஒருவரான ப்ரியா ஆனந்த், ’வாமனன்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’வணக்கம் சென்னை’ ’இரும்பு குதிரை’ ’வை ராஜா வை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ’அந்தகன், ‘சுமோ’ ’காசேதான் கடவுளடா’ ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நித்தியானந்தா மீது தனக்கு கிரஷ் என்றும் அவரை திருமணம் செய்ய கூட ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நித்தியானந்தாவை திருமணம் செய்தால் தன்னுடைய பெயரான பிரியா ஆனந்த் என்பதை கூட மாற்றம் அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நித்தியானந்தா பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவாக உள்ளார். கைலாசம் என்ற கற்பனை நாட்டில் தான் இருப்பதாக அவ்வப்போது அவர் கூறிக்கொண்டிருந்தாலும் எந்த நேரத்திலும் அவர் போலீசாரிடம் பிடிபட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4