நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் - டில்வின் சில்வா

Kanimoli
2 years ago
 நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் - டில்வின் சில்வா

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை வெளியேற்றி நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று(08) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேறு வழியில்லை. மற்ற நாடுகளில் இதுபோன்ற நெருக்கடியின் போது பதவிகளை துறக்கும் அளவுக்கு தலைவர்கள் செயற்படுகின்றார்கள். ஆனால் மக்களின் உயிரை பணயம் வைத்தும் தங்கள் பதவிகளில் நமது தலைவர்கள் பிடிவாதமாக உள்ளனர்.

எனவே அரசு பதவி விலகும் வரை மக்கள் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.

நாளை(09) காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் நடத்தும் பாரிய போராட்டத்திற்கு ஜே.வி.பி தனது பூரண ஆதரவை வழங்கும்.

போராட்டத்திற்கு காரணமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக போராட்டத்தை இல்லாமல் செய்வதற்கே அரசு முயற்சிக்கிறது” என கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!