புதிய கொரோனா வைரஸ் அலைகள் வர வாய்ப்பு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

#Covid 19
Prasu
3 years ago
புதிய கொரோனா வைரஸ் அலைகள் வர வாய்ப்பு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. 

தற்போது புதிய உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வகை மாறுபாடுகளில் பல நாடுகளால் நோய் தொற்று பரவி வருகிறது. 

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, "கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. 

இது சுகாதார அமைப்புகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது மேலும் அழுத்தம் கொடுக்கிறது. இறப்புகளின் போக்கு அதிகரித்து வருவது குறித்தும் கவலைப்படுகிறேன்.

ஒமைக்ரானின் துணை வகைகளான பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 போன்றவை உலகம் முழுவதும் பாதிப்புகள், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு ஆகியவற்றின் அலைகளை தொடர்ந்து இயக்குகின்றன என்று கூறி இருந்தார். 

இந்த நிலையில் புதிய கொரோனா வைரஸ் அலைகள் வர வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4