கடும் வெப்ப அலை - போர்ச்சுக்கல், ஸ்பெயினில் பலி எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது

#Death
Prasu
3 years ago
கடும் வெப்ப அலை - போர்ச்சுக்கல், ஸ்பெயினில் பலி எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது

ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் வெப்பம் தகிக்கிறது. லண்டனில் நேற்று 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி அங்குள்ள மக்களை அதிர வைத்தது. 

இந்நிலையில், போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் கடும் வெப்பம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது. 

தற்போது நிலவும் வெப்ப நிலை குறித்து வானியல் நிபுணரான டைய்லர் ராய்ஸ் கூறுகையில், 2003-ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட அதிக வெப்ப நிலையால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 30,000 பேர் வரை பலியாகினர். 

1757-ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பா அதி தீவிர வெப்ப நிலையை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4