திருமண நாளில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த மணப்பெண்

#Iran #wedding #Death
Prasu
2 years ago
திருமண நாளில் துப்பாக்கி குண்டு பாய்ந்து  உயிரிழந்த மணப்பெண்

ஈரான் நாட்டில் திருமணத்தின் போது மணப்பெண் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டை சேர்ந்த Mahvash Leghaei என்ற 24 வயது இளம்பெண்ணிற்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்துகொண்ட அவரின் உறவினர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடியுள்ளனர். அப்போது, தவறுதலாக ஒரு குண்டு மணப்பெண்ணின் தலையில் பாய்ந்தது.

இதனால் பதறிப்போன உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கோமா நிலைக்குச் சென்ற மணப்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த இரண்டு ஆண்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மணப்பெண்ணின் உறவினர் ஒருவர் வேட்டை துப்பாக்கியை பயன்படுத்தியது தெரிய வந்தது.

மணப்பெண்ணின் தலையில் குண்டு பாய்ந்தவுடன் அந்த நபர் அங்கிருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் காவல்துறையினர் அவரை கைது செய்துவிட்டனர். அந்த நபருக்கு துப்பாக்கியை சரியாக பயன்படுத்த தெரியாதது தான் இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் திருமணத்தின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது ஒரு கொண்டாட்டமாக கடைபிடிக்கப்படுகிறது. அது சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!