ஐந்தாம் மாடியிலிருந்து விழுந்த குழந்தை-காப்பாற்றிய நபர்(வீடியோ உள்ளே)

Prasu
2 years ago
ஐந்தாம் மாடியிலிருந்து விழுந்த குழந்தை-காப்பாற்றிய நபர்(வீடியோ உள்ளே)

சீன நாட்டில் இரண்டு வயது குழந்தை அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாம் மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில் ஒரு நபர் பாதுகாப்பாக பிடித்துள்ளார். 

சீன நாட்டின் சேஜியாங் மாகாணத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 5- ஆம் மாடியிலிருந்து குழந்தை ஒன்று தவறி கூரையின் மேல் விழுந்திருக்கிறது. அதிலிருந்து கீழே விழும் போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு நபர் 2 கைகளையும் விரித்து குழந்தை விழாதவாறு பாதுகாப்பாக பிடித்து விட்டார்.

தற்போது அந்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இது குறித்த வீடியோ வெளியாகியிருக்கிறது. இது பற்றி குழந்தையை காப்பாற்றிய நபர் தெரிவித்ததாவது, குழந்தையை காப்பாற்றி விட வேண்டும் என்று மட்டும் தான் நினைத்தேன். வேறு எதையும் நான் சிந்திக்கவில்லை. என் கைகளில் காயமிருக்கிறதா? என்பதையும் நான் பார்க்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு விட்டது. எனினும் குழந்தையின் கால்களிலும் நுரையீரல் பகுதியிலும் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுந்த நேரத்தில் அந்த நபர் பாதுகாப்பாக குழந்தையை பிடித்து விட்டதால் உயிருக்கு ஆபத்து இல்லாமல் போனது என்று  மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!