சர்வ கட்சி அரசாங்கத்தில் இணையுமாறு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு!

Nila
2 years ago
சர்வ கட்சி அரசாங்கத்தில் இணையுமாறு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு!

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை தொடர்ந்து அரசியல் அரங்கில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அனைத்துக் கட்சி உள்ளடங்கிய அரசாங்கத்தில் இணையுமாறு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க அரசு முன்மொழிந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அடுத்த பதினைந்து நாட்களில் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் வரை தற்போதைய அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையாகச் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில், ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பதவி ஏற்றார்.

அதனை தொடர்ந்து 18 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை பதவி ஏற்றது.இந்த அமைச்சரவையில் ஐ.ம.ச எம்.பிகள் இருவர் அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஏனைய ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பில் உள்ள கட்சிகள்,குழுக்களுக்கு அமைச்சு பதவி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இதன் படி அவற்றுடன் இன்று முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதே வேளை சில எதிரணி எம்.பிகள் அமைச்சு பதவி ஏற்க தயாராவதாக தெரிய வருகிறது

.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!