1 நிமிடத்தில் கைகளால் 148 தேங்காய்களை 6வது முறையாக உடைத்து கின்னஸ் சாதனை

Prasu
3 years ago
1 நிமிடத்தில் கைகளால் 148 தேங்காய்களை 6வது முறையாக உடைத்து கின்னஸ் சாதனை

ஜெர்மனியின் 148 தேங்காய்களை கைகளால் அடித்து உடைத்து  ஒருவர் ஆறாவது முறையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் தான் முஹம்மது கஹ்ரிமனோவிக். இவர் தற்காப்புக் கலைஞர் ஆவார்.  ஒரு நிமிடத்தில் கைகளால் 148 தேங்காய்களை உடைத்து 6-வது முறையாக இப்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அந்த நபர் ஏற்கனவே கைகளால் அதிக தேங்காய்களை உடைத்து 5 முறை கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் மீண்டும் கைகளால் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 148 தேங்காய்களை உடைத்துள்ளார். அதன் மூலம் அவர் 6-வது முறையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதுவும் குறிப்பாக ஒவ்வொரு தேங்காயையும் ஒரு கையால் அடித்து உடைத்து இருக்கிறார். பின்பு இரு கைகளையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி தேங்காய்களை அடித்து உடைத்து அவர் சாதனை படைத்துள்ளார்.

இத்தாலிய தொலைக்காட்சி தொடரான லோ ஷோ டீ ரெக்கார்டின் மிலன் தொகுப்பில் 6-வது முறையாக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இது குறித்த வீடியோவை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தங்கள் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4