காங்கோவில் நிகழ்ந்த வன்முறைக்கு இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் மரணம்

#Death
Prasu
3 years ago
காங்கோவில் நிகழ்ந்த வன்முறைக்கு இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் மரணம்

காங்கோ நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணிகளுக்காக ஐ.நா. படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்த படையில் இந்தியாவை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் நேற்று அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள புடெம்போ நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. 

போராட்டக்கார்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த இந்திய பிஎஸ்எப் படை வீரர்கள் இருந்த பகுதியை சுற்றி வைத்த போராட்டகாரர்கள் தாக்குதல் நடத்தினர். 

இதில் இரண்டு இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தனர். இதற்கு காங்கோ அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

காங்கோவில் இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4