ஜோ பைடனை எச்சரித்த ஜின்பிங்

#China #America #President
Prasu
3 years ago
ஜோ பைடனை எச்சரித்த ஜின்பிங்

அமெரிக்கா, சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. 

குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகள் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. தைவான் தன்னை சுதந்திர நாடாக கூறி வருகிறது. 

ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. அதுமட்டும் இன்றி அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற சீனா தனது படைபலத்தை பயன்படுத்த தயங்காது எனவும் சீனா மிரட்டி வருகிறது. 

இதனால் சீனா-தைவான் இடையே பதற்றம் நீடித்து வரும் சூழலில் தைவானுக்கு அமெரிக்கா பல வழிகளில் உதவி செய்து வருகிறது. இதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. 

இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. 

இதனால் கடும் ஆத்திரமடைந்த சீனா, நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால் அதற்குரிய விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும் என சீன எச்சரித்தது. 

இந்த பரபரப்பான சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் தொலைபேசியில் பேசினர். நேற்று முன்தினம் நடந்த இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. 

அப்போது இருநாடுகளுக்கு இடையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4