சுவிஸ் தமிழர் இல்லம் 19வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2022

Prasu
2 years ago
சுவிஸ் தமிழர் இல்லம் 19வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2022

வாருங்கள் வீரர்களே சுவிஸிற்கு.

ஆகஸ்ட் 13/14  இல் தமிழர் விளையாட்டு விழா சுவிஸில் களைகட்டப்போகுறது.

இரண்டாண்டு இடைவெளிக்கு பின்  19 ஆவது தடவையாக "சுவிஸ் தமிழர் இல்லம் "அனைத்துலக தமிழர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் முகமாக நடத்தப்படும் இந்த "தமிழர் விளையாட்டு விழா " இம்முறையும் பிரமாண்டமாக முன்னெடுக்க முன் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது . என்று ஏற்பாட்டாளர்கள். தெரிவிக்கின்றனர்.

சுவிஸில் தமிழர் மட்டுமன்றி  புலம்பெயர் தமிழர்களும் நன்கறிந்த இடம் எதுவென்றால் அது Winterthur புலம் பெயர் தமிழர் எவருக்காவது Winterthur _எனும் இடத்தை அறிமுகப்படுத்தினால் உடனும் அறிந்திட மாட்டார்கள். அதனால் அடை மொழியாக " எங்கட தமிழர் விளையாட்டு விழா நடக்கிற இடம்" என்று சொல்லிப்பாருங்கள். உடனுமே ஆஆ _ அந்த இடமா  ??  என்று கண்டுபிடித்து விடுவார்கள். 

அந்தளவிற்கு இந்த தமிழர் விளையாட்டு விழா  புலம்பெயர் தமிழர்களின் மனங்களில் ஆழப்பதிந்த விளையாட்டு திருவிழாவாக மாறிவிட்டது .இந்த கிண்ணத்துக்காக  விளையாட்டு வீரர்கள் களமிறங்கி மோதுகின்ற மாபெரும் பிரமாண்ட விளையாட்டுப்பெருவிழா என்றால் மிகையில்லை.

மெய்வன்மைப்போட்டிகள் ஒரு புறம்.உதைபந்தாட்டம் கரப்பந்தாட்டம் துடுப்பாட்டம் என  வீரர்கள் முட்டி மோதுகின்ற வீரதீரத்தால் மைதானம் உற்சாகமாகயிருக்கும் குவிந்திருக்கும் உறவுகள் மனங்களிலும் மகிழ்ச்சியும் எழுச்சியும் நிறைவாக இருக்கும்.

எங்கள் தேசிய விளையாட்டு  கிளித்தட்டும் இம்முறையும் மிக சிறப்பாக ஆண் .பெண் இருபாலருக்குமான கிளித்தட்டு போட்டிகளுக்கும் அணிகள் தமது பதிவுகளை மேற்கொண்டு வருகின்றன. ஆர்வத்துடனும் பெரு மகிழ்ச்சியோடும் வீரர்கள் கிளித்தட்டில் களமிறங்கி கலக்கவுள்ளனர்.

கொரோனா போரிடருக்கு பின்னதாக இரண்டு வருட இடைவெளியின் பின்னர் தமிழர் விளையாட்டு பெருவிழா நடைபெறவிருப்பதால் இம்முறை வழமைக்கு மாறாக பெருந்திரளான எம் தமிழ் உறவுகள் மைதானத்தில் அணி அணியாக அணி திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு தனிநாட்டுக்கான  சகல கட்டமைப்புகளையும்  தமிழர் தம் வசம் வைத்து   அங்கீகாரத்திற்காக  காத்திருப்போடு சரியான முறையில் நகர்த்தி வருகின்றனர். அதிலொன்றுதான் விளையாட்டுத்துறை.

எனவே உடல்,உள ஆரோக்கியத்திற்காக மட்டுமன்றி தமிழர் தேச - தமிழ்த்தேசிய ஒற்றுமைப்பாட்டிற்காகவும் அனைத்து தமிழர்களும் ஒருங்கிணையும் விளையாட்டு நிகழ்வாகவே இது பார்க்கப்படுகிறது.

இந்த விளையாட்டு விழா தொடர்பான மேலதிக விபரங்களுக்கு,0763234948 , 079 9278696 , 0765287112  ஆகிய   அலைபேசிகளோடு  தொடர்புகொள்ளலாம். என்று தெரிவிக்கப்படுகிறது.