குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது: பிரதமர்

Prathees
3 years ago
குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது: பிரதமர்

துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொஸ்கம பொரலுகொட ஸ்ரீ வர்தனராம விகாரைக்கு வருகை தந்த பிரதமர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கம்பஹாவின் கெஹல்பத்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

முடிதிருத்தும் கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் சுடப்பட்டான்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4