ரஷ்ய ஜனாதிபதி புதின் போன்று உருவம் கொண்ட பொது வெளியில் உலா வரும் போலி நபர்?

#Russia #President #Putin
Prasu
3 years ago
ரஷ்ய ஜனாதிபதி புதின் போன்று உருவம் கொண்ட பொது வெளியில் உலா வரும் போலி நபர்?

ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து சமீபத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவர் புற்றுநோயால் அவதிப்படுவதாக கூறப்பட்டது. பிறநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் போது, புதினின் கை, கால்களில் நடுக்கம் இருந்தன என்று ஊடகங்கள் தெரிவித்தன. 

இதேபோல் புதின், தன்னை போன்று உருவம் கொண்ட நபர் பொது வெளியில் உலாவ விடுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை ரஷியா திட்டவட்டமாக மறுத்தது. 

இந்த நிலையில் புதினை போன்றே தோற்றம் கொண்ட போலி நபர் உலாவி வருவதாக உக்ரைன் நாட்டு உளவுத்துறை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக உக்ரைனின் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடானோவ் ஒருதொலைக் காட்சியில் பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- புதினின் சமீபத்திய தோற்றங்களில் அவரது உயரமும், காதுகளும் மாறி உள்ளன. அவரது புகைப் படங்களில் ஒவ்வொன்றிலும் காதுகள் வித்தியாசமானதாக இருக்கிறது. 

ஒவ்வொரு நபரின் காதும் தனித்துவமானது. அது ஒரு கைரேகை போன்றது. அதை மீண்டும் செய்ய முடியாது. புதினை போன்று வேறு ஒரு நபரை பயன்படுத்தி வருகிறார்கள். 

சமீப காலங்களில், புதின் பொது வெளியில் தோன்றிய போது வெவ்வேறான பழக்க வழங்கங்கள், வித்தியாசமான நடத்தைகள், வித்தியாசமான நடைகள், நன்கு கூர்ந்து கவனித்தால் வெவ்வேறு உயரங்களை நீங்கள் பார்க்கலாம் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4