டொலர் முதலீட்டு திட்டத்தை ஆரம்பிப்பதற்காகவே தான் வடக்கிற்கு விஜயம் செய்தேன் - ரவி கருணாநாயக்க

Prabha Praneetha
3 years ago
டொலர் முதலீட்டு திட்டத்தை ஆரம்பிப்பதற்காகவே தான் வடக்கிற்கு விஜயம் செய்தேன் - ரவி கருணாநாயக்க

இலங்கைக்கு  தேவையான  டொலர்களை பெற்றுக்கொடுக்கும் முதலீட்டு திட்டத்தை ஆரம்பிப்பதற்காகவே அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்ததாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

“நான் ஏன் ஹெலிகாப்டரில் வடக்கே செல்லக்கூடாது? நான் அரசாங்கத்தில் இல்லாததால், நான் விரும்பியதைச் செய்ய முடியும் தவிர, நான் அண்மையில் மன்னாருக்கு விஜயம் செய்ததை எதிர்மறையாக சித்தரிக்கக் கூடாது என்றார்.

பொது விழா ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கருணாநாயக்க கூறினார்.

அரசாங்கத்தில் ஏதாவது பதவியை ஏற்க விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, பதவிகளை வகிப்பது முக்கியமல்ல, மக்களுக்காக   உழைப்பது  முக்கியம் என்று ரவி கருணாநாயக்க கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4