கொரோனாவில் இருந்து மீண்டும் குணமடைந்த அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்

#America #President #Covid 19
Prasu
3 years ago
கொரோனாவில் இருந்து மீண்டும் குணமடைந்த அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஜூலை 21-ம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 

ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையே அதிபர் ஜோ பைடன் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டார் என அதிபரின் டாக்டர் தெரிவித்தார். 

ஜூலை 31-ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டார். 

இதையடுத்து, மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்ட அதிபர் பைடன் கண்காணிப்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இன்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4