பாகிஸ்தான் பாராளுமன்ற இடைத்தேர்தல்-இம்ரான் கான் 9 தொகுதிகளில் போட்டி

#Pakistan #ImranKhan #Election
Prasu
3 years ago
பாகிஸ்தான் பாராளுமன்ற இடைத்தேர்தல்-இம்ரான் கான் 9 தொகுதிகளில் போட்டி

பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி வீழ்த்தப்பட்டபோது, அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் 131 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். 

அவர்களில் 11 பேரது ராஜினாமாவை பாராளுமன்ற சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த 11 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 தொகுதிகள் பெண்களுக்கானவை. 9 தொகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் கட்சித்தலைவர் இம்ரான்கான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை அந்தக் கட்சியின் துணைத்தலைவர் பவாத் சவுத்ரி உறுதி செய்தார். 9 தொகுதிகளில் இம்ரான்கான் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது, பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. 

இது பற்றி அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கையில், "9 தொகுதிகளில் பொருத்தமான வேட்பாளர் கிடைக்கவில்லையா?" என்று கேள்வி எழுப்பினர். 

2018 பொதுத்தேர்தலில் இம்ரான்கான், 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது. 

இப்படி பல தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுவதின் மூலம் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் பிரபலத்தை நிரூபித்துக்காட்ட முயற்சிக்கிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4