உக்ரைன் குறித்து வெளியான அறிக்கையால் பதவியை ராஜினாமா செய்த அம்னஸ்டி இன்டர்நேஷனல் தலைவர்

#Ukraine #Resign
Prasu
2 years ago
உக்ரைன் குறித்து வெளியான அறிக்கையால் பதவியை ராஜினாமா செய்த அம்னஸ்டி இன்டர்நேஷனல் தலைவர்

உக்ரைன் ராணுவம் தங்கள் நாட்டு மக்களை மனித கேடயங்களாக்குகிறது என்று அம்னஸ்டி என்னும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த அமைப்பின் உக்ரைன் நாட்டு பிரிவுக்கான தலைவரான ஒக்சானா போகல்சுக் பதவி விலகியிருக்கிறார்.

அதாவது அந்த அறிக்கையை வெளியிட அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதை மீறி அறிக்கை வெளியாகியதால் பதவி விலகியதாகவும் விளக்கம் தெரிவித்திருக்கிறார். 

இது குறித்து, அவர் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யா மேற்கொண்டிருக்கும் போரில் உக்ரைன் நாட்டிற்கு பின்னடைவை உண்டாக்கக்கூடிய விதத்தில் அந்த அறிக்கை இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!