இலங்கையில் களைகொல்லியான கிளைபோசெட்டின் இறக்குமதி தடை நீக்கம்!

Mayoorikka
3 years ago
இலங்கையில் களைகொல்லியான  கிளைபோசெட்டின் இறக்குமதி தடை நீக்கம்!

களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடை ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான வர்த்தமானியின் கையெழுத்திட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு களைக்கொல்லி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோதும், தேயிலை மற்றும் ரப்பருக்கு கிளைபோசேட் பயன்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் மலர் வளர்ப்புத் தொழிலில் நோய் நீக்கம் மற்றும் நோயுற்ற கரும்புச் செடிகள் மற்றும் தென்னை மரங்களின் இலைவாடல் நோயை அகற்றுவதற்காக கட்டுப்பாட்டு அளவில் கிளைபோசெட்டை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் 100 சதவிகித இயற்கை விவசாயத்திற்கு செல்ல அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்ததால் 2021 ஆம் ஆண்டில் கிளைபோசெட் மீண்டும் தடை செய்யப்பட்டது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4