அரிசியின் விலை அடுத்த சில நாட்களில் குறையும் - சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கே ரஞ்சித்

Kanimoli
3 years ago
அரிசியின் விலை அடுத்த சில நாட்களில் குறையும் - சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கே ரஞ்சித்

   அரிசியின் விலை அடுத்த சில நாட்களில் குறையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கே ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி உதவியாக வருவதால் சந்தையில் அரிசி விற்பனை குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே எதிர்காலத்தில் அரிசியின் விலை மேலும் குறையும் என்று அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எரிவாயுவின் விலைகள் இன்றுமுதல் குறைவடையவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  நாளை முதல் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4