இன்றைய போராட்டத்திற்கு நீதிமன்ற தடை இல்லை – காவல்துறை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது

Prathees
3 years ago
இன்றைய போராட்டத்திற்கு நீதிமன்ற தடை இல்லை – காவல்துறை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது

கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள போராட்ட இயக்கம் மற்றும் பேரணியில் மக்கள் இணைவதை தடுக்குமாறு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நேற்று (08ஆம் திகதி) நிராகரித்துள்ளார்.

அமைதியான செயற்பாட்டாளர்களை கைது செய்து அரசாங்கம் முன்னெடுத்துவரும் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல அமைப்புகளால் இன்று (9ம் திகதி) கொழும்பில் போராட்டம் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. ஜோசப் ஸ்டாலின் உட்பட இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தவுள்ள எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்வதைத் தடுக்குமாறு குருந்துவத்தை பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4