நாட்டில் சீரற்ற கால நிலை நிலவிவரும் நிலையில் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்!

Prabha Praneetha
3 years ago
நாட்டில் சீரற்ற கால நிலை நிலவிவரும் நிலையில் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்!

நாட்டில் சீரற்ற கால நிலை நிலவிவரும் நிலையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து காலி வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் 30- 40 கி.மீ.வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

மேலும், புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படலாம் என்றும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4