யாழில் புதிய சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்க மணிவண்ணன் தீர்மானம்

Kanimoli
3 years ago
யாழில் புதிய சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்க மணிவண்ணன் தீர்மானம்

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கோண்டாவிலில் உள்ள யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான நீர் விநியோக கிணறு அமைந்துள்ள 11 ஏக்கர் காணியிலேயே குறித்த மைதானம் அமைக்கும் யோசனை யாழ்.மாநகர சபையின் மாநகர முதல்வர் மணிவண்ணனால் முன்வைக்கப்பட்டது.

கோண்டாவிலில் உள்ள மாநகர சபையின் நீர் விநியோக கிணறு அமைந்துள்ள காணி சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்க பொருத்தமானது எனவும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையோ நன்கொடையாளர்களோ முன்வந்தால் அதற்கான அனுமதியை வழங்கலாமா இல்லையா என்பது தொடர்பிலும் சபையின் சம்மதம் இதன்போது கோரப்பட்டது.

இது தொடர்பில் ஆராய கால அவகாசம் தேவை என மாநகர சபை உறுப்பினர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டதால் இவ்விடயத்தை அடுத்த கூட்டத்திற்கு ஒத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடமாகாணத்தில் அமையக் கூடியதாக ஓர் சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட மைதானம் அமைக்க இலங்கை துடுப்பாட்ட கட்டுப்பாட்டு சபையால் மண்டைதீவு பகுதி முன்னர் ஆராயப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4