உடல் உறுப்பு தான தினத்தையொட்டி மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

Kanimoli
3 years ago
 உடல் உறுப்பு தான தினத்தையொட்டி மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் 27ஆம் திகதி திடீரென மரணம் அடைந்தார்.

கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வர தொடங்கி இருக்கிறார். நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

"என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய யாராவது முன்வந்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். அந்த வகையில் எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4