யாழ்ப்பாணதத்தில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Kanimoli
2 years ago
  யாழ்ப்பாணதத்தில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  யாழ்ப்பாணம் - கோண்டாவில், வீரபத்திரர் கோவிலை அண்டிய பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது , அவற்றை விற்பனை செய்து அதன்மூலம் பெற்றுக்கொண்ட பணத்துடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் 23 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்

அப்போது அவரது உடமையில் இருந்து ஒரு தொகை போதை மாத்திரை, அவற்றை விற்பனை செய்ததன் மூலம் பெற்றுக்கொண்ட பணம் என்பவற்றை மீட்டனர்.

அதனை அடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!