நண்பனின் வீட்டுக்கு சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

Mayoorikka
3 years ago
நண்பனின் வீட்டுக்கு சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

நண்பனின் வீட்டுக்கு வந்து கதிரையில் அமர்ந்தவர் திடீரென மயங்கி சரித்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துள்ளார்.

உடனடியாக வீட்டார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிக்கையிட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4