இத்தாலிய யுவதி ஒருவர் மிகப் பெரிய இயந்திரவியல் இறக்கையை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்
Kanimoli
2 years ago
ஆரியானா பலும்போ எனும் இத்தாலிய யுவதி ஒருவர் 6.22 மீற்றர் நீளமும் 20.4 அடியையும் கொண்ட மிகப் பெரிய இயந்திரவியல் இறக்கையை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இத்தாலியின் மிலான் நகரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின்போது ஆரியானா பலும்போ இந்த இறக்கையை பயன்படுததியுள்ளார்.
கதாபாத்திரமொன்றின் ஆடை அணிகலனாக பயன்பத்தப்பட்ட மிகப் பெரிய இயந்திரவியல் இறக்கை இது என கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் அங்கீகரித்தள்ளனர்.
‘த செவன் டெட்லி சின்ஸ்’ எனும் கொமிக் நாவலில் வரும் எலிஸபெத் பாத்திரத்தின் உந்துதலினால் இந்த இறக்கையை தான் தயாரித்ததாக ஆரியானா தெரிவித்துள்ளார்.
இது 8 கிலோகிராம் எடையுடையதாக இந்த இறக்கை அமைந்திருந்ததாக கூறப்படுகிறது