வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டாளர்கள் கைது

Prathees
3 years ago
வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டாளர்கள் கைது

கொழும்பு யூனியன் பிளேஸில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 02 பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட பின்னர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு யூனியன் பிளேஸில் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4