யாழில் பற்றைக்குள்ளிலிருந்து நபர் ஒருவரின் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Kanimoli
3 years ago
யாழில் பற்றைக்குள்ளிலிருந்து நபர் ஒருவரின் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

யாழில் பற்றைக்குள்ளிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் உள்ள பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி வயது 75 என உறவினர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை காணாமற்போயிருந்தார். இந்நிலையில், மூன்று நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் உருக்குலைந்து காணப்படுவதனால் அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

சம்பவம் தொடாபில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4