யாழில் சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Kanimoli
3 years ago
யாழில்  சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கையில் கடந்த வாரத்தில் மாத்திரம் பல குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளது.

இதில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் அடங்கும்.

யாழில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும்  விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது. 

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை பிரதேசத்தில் 17 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவர் வெள்ளை நிற காரில் வந்த கும்பலினால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். இது வரை மாணவி தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முஸ்​லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு, காதலியை உலவு பார்க்கும் மோசமான செயலில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞன், ஒருவரும் காலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வவுனியா தேக்கவத்தை பகுதியில் விடுதி ஒன்று பொலிசாரால் முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதுடன், விடுதியில் இருந்து ரி 56 ரக 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4