இந்தோனேசியாவில் சுமார் 250 கோடி செலவில் மகளின் திருமணத்தை நடத்திய இந்திய கோடீஸ்வரர்

Prasu
3 years ago
இந்தோனேசியாவில் சுமார் 250 கோடி செலவில் மகளின் திருமணத்தை நடத்திய இந்திய கோடீஸ்வரர்

தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் டிஆர்எஸ் என்ற கட்சியினுடைய முன்னாள் எம்.பியான பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தன் மகள் ஸ்வப்னா ரெட்டியின் திருமணத்தை இந்தோனேசியா நாட்டிலுள்ள பாலி தீவில் மிக பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார். இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 500 நபர்களுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து திருமணத்தில் விடுபட்ட நபர்களை வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரவழைத்திருக்கிறார். வரவேற்பு நிகழ்ச்சியில் 3 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். சுமார் 30 ஏக்கர் அளவிற்கு பந்தல் அமைத்தனர்.

மேலும், திருமணம் நடக்கும் இடத்திற்கு செல்ல புதிதாக பாலங்களும், சாலைகளும் உருவாக்கப்பட்டிருக்கிறது. 20 ஏக்கர் அளவிற்கு உணவு பரிமாறக்கூடிய மேசை மற்றும் நாற்காலிகள் போட்டிருந்தனர். சுமார் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4