கோத்தபாய வருவதற்கான சூழலை உருவாக்குங்கள்: ஜனாதிபதிக்கு பசில் கடிதம்

Prathees
3 years ago
கோத்தபாய வருவதற்கான சூழலை உருவாக்குங்கள்: ஜனாதிபதிக்கு பசில் கடிதம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக இலங்கை திரும்புவதற்கான சூழலை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பூரண ஆதரவை வழங்கும் என கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதியின் தரப்பு பிரதிநிதிகள் குழுவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது தாய்லாந்து சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இந்த நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி தரப்பில் சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, ருவான் விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் ஷமல் செனவிரத்ன, தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4