பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து: இரு யுவதிகளுடன் 14 இளைஞர்கள் கைது

Prathees
3 years ago
பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து: இரு யுவதிகளுடன் 14 இளைஞர்கள் கைது

பியகம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் முகநூல் மூலம் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்ட இரண்டு யுவதிகளுடன் 14 இளைஞர்களும் நேற்று முன்தினம் (20) காலை பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞரொருவரிடம் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும், ஏனைய குழுவினரிடம் போதைப்பொருள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படிஇ போதைப்பொருளுடன் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞனை மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஏனைய குழுவினர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கொழும்புஇ கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் வசிக்கும் இந்த இளைஞர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4