பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்!

Mayoorikka
3 years ago
பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்!

மே மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கவனக்குறைவு மற்றும் தவறான தீர்மானங்களினால் நாடு இந்த நிலைமைக்கு விழுந்துள்ளமை தொடர்பில் சாட்சியமளிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

மே 9 ஆம் திகதி முதல் ஜூலை 12ஆம் திகதி வரை இரு தரப்பிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், அதற்குப் பின்னால் உள்ள காரணங்கள், அதற்குப் பின்னால் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4