இலங்கையில் 2027ஆம் ஆண்டுக்குள் தமிழர் ஒருவர் பிரதமராகலாம் அல்லது ஜனாதிபதி ஆகலாம் பிரபல எண்கணித ஜோதிடர் கணிப்பு

Kanimoli
3 years ago
இலங்கையில் 2027ஆம்  ஆண்டுக்குள் தமிழர் ஒருவர் பிரதமராகலாம் அல்லது ஜனாதிபதி ஆகலாம் பிரபல எண்கணித ஜோதிடர் கணிப்பு

இலங்கையில் எதிர்வரும் 2027ஆம்  ஆண்டுக்குள் தமிழர் ஒருவர் பிரதமராகலாம் அல்லது ஜனாதிபதி ஆகலாம் என்ற காலகட்டம் வரப் போகின்றது என பிரபல எண்கணித ஜோதிடர் செல்வன் தெரிவித்துள்ளார். 

எனவே இலங்கையின் அரசியலமைப்பு திருத்தி எழுத்தப்படும் என்பது என்னுடைய கணிப்பு, கண்டிப்பாக அது நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

சிங்கள பௌத்தர் ஒருவர்தான்  இலங்கையின் ஜனாதிபதியாக ஆகலாம் என்ற வரலாறு  நிச்சயமாக திருத்தியமைக்கப்படும், இது காலத்தின் கட்டாயம் எனவும் அவர் கூறினார். 

அரச கதிரையில் நிச்சயமாக தமிழர்களுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஜோதிடர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தமிழர் அரசியல் தரப்புக்கள் அனைத்தும் மிக மிக நெருக்கமாக ஒன்றிணைவார்கள்.  மிகப்பெரிய பிடிமானம்  தமிழர் தரப்பிற்கு கிடைக்கும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் உடல் நிலை கடுமையான பாதிப்புக்குளாகும்.  அப்போது அங்கு ஒரு போட்டி நிலை ஏற்படும். அதன் போது சிறந்த ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு  அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4